தமிழ்நாடு
சென்னை: மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு
சென்னை: மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு
சென்னை கந்தன்சாவடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் வடமாநில தொழிலாளர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து மழை பெய்து வருகிறது. இடைவிடாமல் பெய்த மழையால் சென்னையின் பல்வேறு தெருக்கள், சாலைகள், குடியிருப்புகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.
இந்நிலையில் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை கந்தன்சாவடி அருகே, தங்கள் கடைக்கு அருகில் தேங்கிய மழைநீரை மோட்டார் மூலம் அகற்ற முயன்ற பெரு (35), பிங்கு (22) என்ற இரு வடமாநில தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தரமணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

