\
மதுரையில் ஒரேநாளில் நடந்த இருவேறு கொலைகள் - போலீசார் தீவிர விசாரணை

மதுரையில் ஒரேநாளில் நடந்த இருவேறு கொலைகள் - போலீசார் தீவிர விசாரணை

மதுரையில் ஒரேநாளில் நடந்த இருவேறு கொலைகள் - போலீசார் தீவிர விசாரணை
Published on: 

மதுரையில் ஒரே நாளில் நடைபெற்ற இருவேறு கொலை சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கே.புதூர் ஐ.டி.ஐ எதிரே உணவகம் வைத்து நடத்தி வருபவர் முத்துக்குமார் (45). மதுரை ஆத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 6 மாதமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இன்று உணவகத்தில் இருந்த முத்துக்குமாரை, மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியதுடன் அவரது கையை வெட்டி எதிரே உள்ள ஐடிஐ வளாக சுவர் அருகே வீசிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முன்பகை காரணமாக கொலை நிகழ்ந்துள்ளதா அல்லது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக கொலை நிகழ்ந்துள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள பாரதியார் 5வது தெருவில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் சிவகுமார் - மேரிக்குட்டி தம்பதியருக்கு திருமணமாகி 35 வருடங்களாக குழந்தைகள் இல்லாததால் தனியே வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், தொடர்ந்து இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரமடைந்த சிவகுமார் மேரி குட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள எஸ்எஸ்.காலனி போலீசார் சிவக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com