\
பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களுக்கு அடி, உதை

பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களுக்கு அடி, உதை

பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களுக்கு அடி, உதை
Published on: 

தஞ்சை மாவட்டத்தில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த இருவரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். 

தஞ்சை மாவட்டம், மதுக்கூர் தாலுகா, சிரமேல்குடி அருகே வயலில் வேலை செய்து கொண்டிருந்த தனது தாய்க்கு, பெண் ஒருவர் உணவு கொண்டு சென்றுள்ளார். அப்போது‌ அங்கு மதுபோதையில் இருந்த தம்பிகோட்டையைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஒருவரும், அவரது நண்பரும் சேர்ந்து அப்பெண்ணை வழிமறித்து பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த பொதுமக்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் இருவரையும் பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com