சேலம்: நள்ளிரவில் நிகழ்ந்த சாலை விபத்து – மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு

சேலம் அருகே நேற்று நள்ளிரவில் நிகழ்ந்த சாலை விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சாலை விபத்து
சாலை விபத்து முகநூல்

செய்தியாளர்: S. மோகன்ராஜ்

புதுச்சேரி மகாத்மா காந்தி தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் ஐந்து பேர் சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியில் உள்ள நண்பர் அபிநவ் என்பவர் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று நள்ளிரவு மீண்டும் சேலம் திரும்பியுள்ளனர். அப்போது அவர்கள் சென்ற கார், பனமரத்துப்பட்டி அருகே உள்ள பொய்மான் கரடு பகுதியில் சாலையோரம் நின்றிருந்த டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

கார் மோதிய டேங்கர் லாரி
கார் மோதிய டேங்கர் லாரிpt desk

இந்த விபத்தில் காரில் பயணித்த புதுச்சேரி மகாத்மா காந்தி தனியார் மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று வரும் சேலத்தைச் சேர்ந்த கௌதம், கன்னியாகுமரியை சேர்ந்த கேமியோ ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த ஜெகநாத், சத்யபிரியன் ஆகியோர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாலை விபத்து
தேர்தல் பத்திரம் என்றால் என்ன? எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றுள்ளன?

காரில் பயணித்த சேலத்தை சேர்ந்த மற்றொரு மாணவன் சரண் முதலுதவி பெற்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து மல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com