\
இரட்டை இலை விவகாரம்: கூடுதல் அவகாசம் கேட்கிறது சசிகலா அணி

இரட்டை இலை விவகாரம்: கூடுதல் அவகாசம் கேட்கிறது சசிகலா அணி

இரட்டை இலை விவகாரம்: கூடுதல் அவகாசம் கேட்கிறது சசிகலா அணி
Published on

இரட்டை‌ இலை சின்னம் தொடர்பாக ஆவணங்கள் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரி, தேர்தல் ஆணையத்தை சசிகலா த‌‌ரப்பு நாடியுள்ளது. 8 வார காலம் அவகாசம் வழங்குமாறு சசிகலா தரப்பு வழக்கறிஞர், தேர்தல் ஆணையத்தில் கடிதம் கொடுத்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு ஓ.பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என இரண்டாக‌ பிரிந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி அதிமுக-வின் இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை எழுந்தது. இதுதொடர்பான விசாரணையின் போது தேர்தல் ஆணையத்தில் இரு தரப்பும் பல்வேறு ஆவணங்களை தாக்கல் செய்தது. முடிவில் கட்சி சின்னம் மற்றும் கட்சியின் பெயரை பயன்படுத்த இரு அணிகளுக்கும் இடைக்கால தடைவிதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

வரும் 17 ஆம் தேதி மீண்டும் கட்சி சின்னம் யாருக்கு என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்தச் சூழ்நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய 8 வார காலம் அவகாசம் வழங்குமாறு சசிகலா தரப்பு தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com