தமிழ்நாடு
யாருக்கு இரட்டைஇலை? 12,600 பக்கங்கள் தாக்கல் செய்த ஒபிஎஸ் அணி
யாருக்கு இரட்டைஇலை? 12,600 பக்கங்கள் தாக்கல் செய்த ஒபிஎஸ் அணி
இரட்டைஇலை சின்னம் பெறுவது தொடர்பான விவகாரத்தில், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பாக 12 ஆயிரத்து 600 பக்கங்கள் கொண்ட பிரமாணப்பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
தேர்தல் ஆணையத்தால் இரட்டைஇலை சின்னம் முடக்கப்பட்டுள்ளதால், அதற்கு உரிமை கோரி, அதிமுகவின் இரு அணியினரும், தொண்டர்களின் ஆதரவை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஒபிஎஸ் அணி சார்பாக ஏற்கனவே, 43 லட்சம் தொண்டர்கள் தங்கள் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மேலும் 10 லட்சம் தொண்டர்களின் ஆதரவு தங்களுக்கு உள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளனர். இதற்காக 12,600 பக்கங்கள் கொண்ட பிரமாணப்பத்திரங்கள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.