கழிவுநீர்த் தொட்டியில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு : திருவள்ளூரில் சோகம்

கழிவுநீர்த் தொட்டியில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு : திருவள்ளூரில் சோகம்
கழிவுநீர்த் தொட்டியில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு : திருவள்ளூரில் சோகம்

திருவள்ளூரில் கழிவுநீர்த் தொட்டியை துப்புரவு செய்த தொழிலாளர்கள் 2 பேர், விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான இரும்பு துருப்பிடிக்காமல் இருப்பதற்கான ரசாயனம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. அந்தத் தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்வதற்காக புட்லூர் பகுதியைச் சேர்ந்த 3 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேலவன் (40) மற்றும் சந்துரு (35) ஆகிய இருவரும் கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்த போது, இருவரும் மூச்சையாகி மயக்கமடைந்துள்ளனர்.

இது குறித்து தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனைத்தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர், கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி மயக்க நிலையில் இருந்த இருவரையும் மேலே தூக்கி வந்த பரிசோதித்தப் போது, இருவரும் விஷவாயு தாக்கியதில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, வருவாய் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்களும் விசாரணையில் ஈடுபட்டனர். உடற்கூராய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப காவல்துறையினர் ஆயத்தமான போது, பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியில் ஈடுபடுத்தியதாலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறி புட்லூர் பொது மக்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com