\
செங்கல் சூளை தொழிலாளர்கள் மீது மின்சாரம் பாய்ந்து இருவர் பரிதாபமாக பலி

செங்கல் சூளை தொழிலாளர்கள் மீது மின்சாரம் பாய்ந்து இருவர் பரிதாபமாக பலி

செங்கல் சூளை தொழிலாளர்கள் மீது மின்சாரம் பாய்ந்து இருவர் பரிதாபமாக பலி
Published on

பெரியபாளையம் அருகே தனியார் செங்கல் சூளையில் வெல்டிங் பணியின்போது இரும்பு தகடுகளை மிதித்ததில் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது. இங்கு, 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், செங்கல் சூளையில் கொட்டகை அமைப்பதற்காக வெல்டிங் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், பணிகளை மேற்கொள்ள செங்கல் சூளை தொழிலாளர்கள் சென்றபோது வெல்டிங் பணிகளுக்காக போடப்பட்டிருந்த தகரங்களை மிதித்த திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமணா (23), பிரசாந்த் (22) ஆகிய 2 தொழிலாளர்கள் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் போலீசார், 2 சடலங்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com