விளம்பர பதாகையினை தூக்கியபோது மின்சாரம் தாக்கி இருவர் பலி - சமயபுரம் அருகே சோகம்

விளம்பர பதாகையினை தூக்கியபோது மின்சாரம் தாக்கி இருவர் பலி - சமயபுரம் அருகே சோகம்

விளம்பர பதாகையினை தூக்கியபோது மின்சாரம் தாக்கி இருவர் பலி - சமயபுரம் அருகே சோகம்
Published on

விளம்பரப் பதாகையினை தூக்கியபோது மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள மேனகா நகரில் வைரம் என்ற அப்பார்ட்மெண்ட் உள்ளது . இந்த அப்பார்ட்மெண்ட்டை இதேப் பகுதியைச் சேர்ந்த கமாருதீன் வைரம் என்பவர் கட்டி வருகிறார் .

இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை விற்பனை செய்வதற்காக அப்பகுதியில் உள்ள இபி ட்ரான்ஸ்பாரம் அருகே விளம்பர பதாகையினை வைத்துள்ளனர். இரவு டோல்கேட் பகுதியில் பெய்த கடும் மழையினால் இந்த விளம்பரப் பதாகை தரையின் கீழே விழுந்து கிடந்தது.

கீழே கிடந்த பதாகையினை கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள் தூக்கியபோது காற்றின் வேகத்தில் அருகில் இருந்த இபி டிரான்ஸ்பர்மில் சாய்ந்தது. இதில் மண்ணச்சநல்லூர் அருகே சென்னகரை பகுதியைச் சேர்ந்த பழனிவேல் மகன் சேட்டு என்பவரும் லால்குடி திருமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் செல்லதுரை என்பவரும் உயிரிழந்தனர்.

மேலும், படுகாயமடைந்த விமல்குமார் என்பவர் திருச்சி திருவானைக்கோவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து கொள்ளிடம் காவல் ஆய்வாளர் பொன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com