சிக்னலில் நின்றிருந்த 'பைக்'  வேகமாக மோதிய கார்: பகலில் நிகழந்த மோசமான விபத்து

சிக்னலில் நின்றிருந்த 'பைக்' வேகமாக மோதிய கார்: பகலில் நிகழந்த மோசமான விபத்து

சிக்னலில் நின்றிருந்த 'பைக்' வேகமாக மோதிய கார்: பகலில் நிகழந்த மோசமான விபத்து
Published on

ஈரோட்டில் சிக்னலில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

ஈரோட்டில் சிக்னலில் நின்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு முன்னால் நின்று கொண்டிருந்த மினிபஸ் மீதும் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்த திருமலைசாமி, கார் ஓட்டுநர் ராஜேந்திரன் ஆகியோர் உயிரிழந்தனர்.

ஈரோட்டின் முக்கிய சாலை சந்திப்பாக பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு உள்ளது பிரம்மாவை, காந்திஜி சாலை,பார்க் சாலை மற்றும் கச்சேரி வீதி ஆகிய சாலைகளை சந்திக்கும் சாலையில் 24 மணிநேரமும் போக்குவரத்து இருந்துகொண்டே இருக்கும்.

இந்நிலையில் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த திருமலைசாமி என்பவர் பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு சிக்னலில் தனது இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தார். சிக்னலில் மினி பஸ்ஸூம் நின்றிருந்தது. அப்போது சிக்னலை நோக்கி கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது.

ஆப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சிக்னலில் நின்றிருந்த திருமலைசாமியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு மினி பஸ் மீதும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த திருமலைசாமி, கார் ஓட்டுநர் ராஜேந்திரன் ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து ஈரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com