செங்கல்பட்டு: இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - பெண் உட்பட இருவர் உயிரிழப்பு

மீனாட்சி சுந்தரம் என்பவர், சாலையை கடக்க தனது காரை வேகமாக திருப்பியுள்ளார். அப்போது எதிர்திசையில் வீரபத்திரன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியுள்ளது.
Two wheeler accident death
Two wheeler accident deathpt desk

செய்தியாளர்: உதயகுமார்

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அடுத்த கருநீலம் பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்ரன். இவர், ஒரகடம் பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தெளிமேடு பகுதியைச் சேர்ந்த குப்பம்மாள் (45) என்ற பெண், இவரது பைக்கில் லிஃப்ட் கேட்டு ஏறிச் சென்றுள்ளார்.

Car
Carpt desk

இருசக்கர வாகனமானது ஆப்பூர் அடுத்த எல்போர்ஜிங் கம்பெனி நுழைவு வாயில் அருகே சென்றபோது, அந்த நிறுவனத்தில் சேல்ஸ் மேனஜராக பணியாற்றும் மணிமங்கலத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவர், சாலையை கடக்க தனது காரை வேகமாக திருப்பியுள்ளார். அப்போது எதிர்திசையில் வீரபத்திரன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியுள்ளது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற வீரபத்திரன் மற்றும் குப்பம்மாள் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.

Two wheeler accident death
திண்டுக்கல்: பெண் சடலத்துடன் சுற்றிய கார்; போலீசார் சோதனையில் மாட்டிக்கொண்ட நபர்கள்.. நடந்தது என்ன?

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலூர் போலீசார், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து பாலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com