மின்சாரம் தாக்கி 2 யானைகள் உயிரிழப்பு: தவித்து நின்ற குட்டியானை
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தனியார் தேயிலைத் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழந்தன.
நெல்லிக்குன்னு என்ற பகுதியில் துரைசாமி என்பவருக்கு சொந்தமான தேயிலைத் தோட்டத்தில் 2 யானைகள் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்ற வனத்துறையினர் யானைகளின் உடலை ஆய்வு செய்ததில் மின்சாரம் தாக்கி அவை உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், யானைகளின் உடல்கள் கிடந்த இடத்தில் மின்வேலி அமைக்க பயன்படுத்தும் கம்பிகள் உள்ளன. அதனால், மின்வேலியில் சிக்கி யானைகள் இறந்தனவா அல்லது மின்கம்பியில் உரசி உயிரிழந்தனவா என்பது குறித்து வனத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
முதுமலை காப்பகத்தில் இருந்து கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டுள்ளார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகே யானைகள் உயிரிழந்ததற்கான காரணம் என்பது தெரியவரும். இதற்கிடையில், உயிரிழந்த யானைகளின் உடலருகே யாரும் செல்ல முடியாத வகையில் குட்டியானை ஒன்று பிளிறிக்கொண்டிருந்தது. வெடி வைத்து குட்டி வனத்திற்குள் விரட்டப்பட்டது.

