கடலூர் | போட்டி போட்டு பைக் ஓட்டியதால் நேர்ந்த விபரீதம்... சாலையோர வியாபாரி மரணித்த சோகம்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அதிவேகமாக போட்டி போட்டுக்கொண்டு இரு சக்கர வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் இளைஞரோடு சேர்த்து, வியாபாரியின் மகனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்கள்
உயிரிழந்தவர்கள்புதிய தலைமுறை

செய்தியாளர் - கே.ஆர்.ராஜா

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த நடியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (50). இவர் மினி லாரியில் தனது மகன் வீரமுத்து (25), மனைவி சித்ரா (44) ஆகியோருடன் விருத்தாசலம் பாலக்கொள்ளை மெயின் ரோட்டில் முத்தனங்குப்பம் கிராமத்தில் தர்பூசணி வியாபாரம் செய்து வந்துள்ளார்.

அப்போது அப்பகுதி வழியாக மோட்டார் சைக்கிளில் புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மனோபாலா (21) என்பவர், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அவரது நண்பர் மணிவேல் என்பவருடன் போட்டி போட்டுக்கொண்டு (கேடிஎம் பைக்) ஓட்டி வந்து, அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த வீரமுத்து, ராமச்சந்திரன் ஆகிய இருவர் மீதும் மோதியுள்ளனர்.

உயிரிழந்தவர்கள்
கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டில் இந்தியாவின் IT தலைநகரம்... பின்னணி என்ன?

இதில் வீரமுத்துவும், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மனோபாலாவும் படுகாயத்துடன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். தகவல் கிடைத்து விரைந்து வந்த ஆலடி போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்த ராமச்சந்திரன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தின்போது உயிரிழந்த தனது மகன் வீரமுத்துவைக் கண்டு அவரது தாய் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்தவர்கள்
“தம்பி, ஆணவத்தோடு பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்” - அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com