DeathFile Photo
தமிழ்நாடு
ஈரோடு: கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்து – தாத்தா, பேரன் உயிரிழப்பு
ஈரோடு அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் தாத்தா, பேரன் உயிரிழந்த நிலையில், மூவர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செய்தியாளர்: J.மணி
ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்துள்ள லட்சுமி நகர் பேருந்து நிறுத்தம் அருகே கண்டெய்னர் லாரி நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது வேலூரில் இருந்த ஊட்டி நோக்கி குடும்பத்தினருடன் சென்ற கார், கண்டெய்னர் மீது வேகமாக மோதியுள்ளது. இதில் காரில் பயணித்த தாத்தா கமாதீன் (65) மற்றும் அவரது பேரன் அபுதாகிர் (9) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Road accidentpt desk
மேலும் காரில் பயணித்த சுபைதா, நவாஸ் மற்றும் ஆசிபா ஆகிய மூவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சித்தோடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் தாத்தா, பேரன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.