மகா புஷ்கரத்தில் நீரில் மூழ்கி இருவர் பலி

மகா புஷ்கரத்தில் நீரில் மூழ்கி இருவர் பலி

மகா புஷ்கரத்தில் நீரில் மூழ்கி இருவர் பலி
Published on

ஈரோடு மாவட்டம் பவானியில் நடைபெற்ற மகா புஷ்கரத்தின் போது காவிரி ஆற்றில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற மகாபுஷ்கரம் நிகழச்சியில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த ரமேஷ் மற்றும் கவியரசன் இருவரும் காவிரி ஆற்றில் இறங்கி நீராடிய போது, ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து பவானி தீயணைப்புதுறையினர் இளைஞர்களின் சடலங்களை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சித்தோடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com