வேலூர்: டியூசன் சென்றுவிட்டு வீடு திரும்பிய பள்ளி மாணவன் உட்பட இருவருக்கு நேர்ந்த பரிதாபம்

டியூஷன் சென்றுவிட்டு வீடு திரும்பிய பள்ளி மாணவன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய இளைஞரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்தில் மரணித்தவர்கள்
விபத்தில் மரணித்தவர்கள்PT Desk

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன் தனுஷ் (17) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு (01.09.2023) டியூஷன் முடிந்து காட்பாடி குடியாத்தம் நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

அப்போது காட்பாடியில் இருந்து குடியாத்தம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த எல்.ஜி.புதூர் பகுதியைச் சேர்ந்த கதிரவன் (19) என்ற இளைஞர். எதிர்பாராதவிதமாக மாணவன் தனுஷ் மீது மோதியதில் பள்ளி மாணவன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், பலத்த காயமடைந்த கதிரவனை மீட்ட காவல்துறையினர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், அங்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் கதிரவன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில் இருவர் உயிரிழந்தது தொடர்பாக காட்பாடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com