
சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.
ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரைச் சேர்ந்த சஜன் மற்றும் அவரது நண்பர் லோகேஷ் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். வி.ஜி.பி. பொழுதுபோக்கு மையத்தின் எதிரே சாலையின் எதிர் திசையில் சென்ற போது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.
அப்போது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தில் சிக்கி சஜன் உயிரிழந்தார். படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியல் லோகேஷ் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான காட்சிகள் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகியிருந்தன.
இதைவைத்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.