சென்னையில் 2 இளைஞர்கள் விபத்தால் உயிரிழப்பு - பைக் ரேஸ் விபரீதம் ?
சென்னையில் வெவ்வேறு இடங்களில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்துகளில் கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.
சென்னை காமராஜர் சாலையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் சென்ற இளைஞர்கள் மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த சாந்தகுமார் என்ற கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அத்துடன் வண்டியை ஓட்டிவந்த பாலாஜி என்ற இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தால் அங்கு சற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பரபரப்பானது.
இதேபோன்று அண்ணா சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு காரின் மீது இருசக்கர வாகனம் வேகமாக மோதியது. இந்த விபத்திலும் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் உயிரிழந்தார். இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டதே விபத்திற்கு காரணமா ? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். ஏனென்றால் இருசக்கர வாகனத்தின் வேகமாக சென்றாக கூறப்படுகிறது.

