சீனாவிலிருந்து சென்னை வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை !

சீனாவிலிருந்து சென்னை வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை !

சீனாவிலிருந்து சென்னை வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை !
Published on

சீனாவில் இருந்து சென்னை வந்த கப்பலில் இருந்த இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.

19 ஊழியர்களுடன் சீனாவில் இருந்து கப்பல் ஒன்று பிப்ரவரி 18ஆம் தேதி சென்னைக்கு வந்தது. அதில் இருந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தியதில் இரண்டு பேருக்கு லேசான காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனினும் அவர்களுக்கு சுவாசக் கோளாறுகள் ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டு ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிவதற்காக இருவரின் ரத்த மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. கப்பலில் இருப்பவர்கள் வெளியே வருவதற்கும், கரையில் உள்ளவர்கள் கப்பலுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சோதனையின் முடிவில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.

இதேபோல ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தி டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 542 ஆக அதிகரித்துள்ளது. கப்பலில் இருக்கும் பிற நாட்டைச் சேர்ந்தவர்களை அவர்களது நாட்டுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுவருவதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. தொற்று அறிகுறிகள் இல்லாதவர்கள் கப்பலிலிருந்து வெளியேற ஜப்பான் அரசு அனுமதி அளித்ததையடுத்து பயணிகள் அவரவர், சொந்த நாட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com