சென்னை மாதவரம் ரெட்டை ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.
சென்னை மாதவரம் ரெட்டை ஏரிக்கரை அருகில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆடுகளை கொண்டுவந்து வாரச்சந்தையில் விற்பனை செய்வது வழக்கம். பழைய வண்ணாரப்பேட்டையிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த இம்ரான், ஆசான் ஆகிய இருவரும் தங்களது ஆடுகளை விற்பனை செய்ய ரெட்டை ஏரிப்பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது அழுக்காக உள்ள தங்களது ஆடுகளை கழுவ ரெட்டை ஏரிக்குள் இறங்கியுள்ளனர்.
மழைபெய்து ஏரியில் தண்ணீர் நிம்பியுள்ளதால், எதிர்பாராதவிதமாக இருவரும் ஆழமுள்ள பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டு நீரில் மூழ்கி மூச்சு திணறி இறந்தனர். இதை கண்ட சக வியாபாரிகள் புழல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ஸ்டேன்லி மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள புழல் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.