தமிழ்நாடு
12.7 கிலோ கஞ்சா கடத்தல் : மதுரையில் இருவர் கைது
12.7 கிலோ கஞ்சா கடத்தல் : மதுரையில் இருவர் கைது
உசிலம்பட்டியில் 12.7 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக இருவர் நின்று கொண்டிருந்தனர். இதனால் அவர்களை மடக்கிப் பிடித்த காவல்துறையினர், சோதனை நடத்தினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு போலிசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கம்பத்தை சேர்ந்த சிவநேசன் மற்றும் கூடலூரைச் சேர்ந்த சிவமாயன் என்பது தெரியவந்தது.
அத்துடன் இருவரும் கஞ்சாவை கடத்தி வந்ததும் கண்டறியப்பட்டது. பின்னர் இருவரிடமிருந்தும் 12 கிலோ 700 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தற்போது இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.