Tragedy
Tragedypt desk

நெல்லை: கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறு - சகோதரர்கள் இருவர் குத்திக் கொலை

திசையன்விளை அருகே கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக சகோதரர்கள் இருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில், ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
Published on

செய்தியாளர்: ராஜூ கிருஷ்ணா

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே காரம்பாடு கிராமத்தில் ஓடைக்கரை சுடலைமாடசாமி திருக்கோவில் கொடை விழா நேற்று இரவு நடைபெற்றது. இந்த கொடை விழாவில் கரகாட்ட நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையே வாய்த்தகறாறு ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் வாய்த்தகராறு முற்றிய நிலையில், கைகலப்பாக மாறி ஒரு பிரிவைச் சேர்ந்த இளைஞர், மற்றொரு பிரிவைச் சேர்ந்த அண்ணன் தம்பியை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில், படுகாயமடைந்த மதிராஜா மற்றும் மதியழகன் ஆகிய சகோதரர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த இவர்களின் மற்றொரு சகோதரர் மகேஷ்வரன், ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, விசாரணை செய்து வருகின்றனர்.

Tragedy
திருவாரூர்: காவலரை வெட்டிவிட்டு தப்பியோடிய ரவுடி... சுட்டுப் பிடித்த உதவி ஆய்வாளர்!

நெல்லை எஸ்பி சிலம்பரசன் விடுப்பில் இருப்பதால் குமரி மாவட்ட எஸ்பி தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com