\
2 சிறுவர்கள் மரணம்
2 சிறுவர்கள் மரணம்meta ai

வாணியம்பாடி| கிணற்றில் அழுகிய நிலையில் கிடைத்த 2 சிறுவர்கள் உடல்!

வாணியம்பாடி அருகே கிணற்றில் அழுகிய நிலையில் 2 சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.. சிறுவர்கள் குறித்த விவரம் இன்னும் தெரியவில்லை..
Published on
Summary

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் பேரூராட்சிக்குட்பட்ட பெத்தூர் பகுதியில் உள்ள சுகுணா பிரகாசம் என்பவரின் விவசாய நிலக் கிணற்றில் 15 மற்றும் 9 வயது இரண்டு சிறுவர்கள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பேரூராட்சிக்குட்பட்ட பெத்தூர் பகுதியில் சுகுணா பிரகாசம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் 2 சிறுவர்கள் சடலமாக கிடப்பதாக ஆலாங்காயம் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ஆலங்காயம் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் அழுகிய நிலையிலிருந்த 2 சிறுவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு
இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

மேலும் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில், 15 வயது மற்றும் 9 வயது சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்டது, குறித்து ஆலாங்காயம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் மகாலட்சுமி தலைமையிலான காவல்துறையினர், அருகில் உள்ள அரசு மாணவர்கள் விடுதி மற்றும் பல்வேறு கிராமங்களில், இறந்த சிறுவர்கள் யார் ? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com