\
குளத்திற்கு குளிக்கசென்று வெகுநேரமாகியும் திரும்பாத சிறுவர்கள்-கடைசியில் காத்திருந்த சோகம்

குளத்திற்கு குளிக்கசென்று வெகுநேரமாகியும் திரும்பாத சிறுவர்கள்-கடைசியில் காத்திருந்த சோகம்

குளத்திற்கு குளிக்கசென்று வெகுநேரமாகியும் திரும்பாத சிறுவர்கள்-கடைசியில் காத்திருந்த சோகம்
Published on

மன்னார்குடி அருகே குளிக்கச் சென்றபோது குளத்தில் மூழ்கி சிறுவர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே செருமங்கலத்தில் சக்கிலியன் குளம் உள்ளது. இதில் காரக்கோட்டை நடேசன் காலனியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் மகன் டேனியல், விஜயகுமார் என்பவரது மகன் மகேந்திரன் (15) ஆகிய இருவரும் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது குளத்தின் ஆழத்துக்கு சென்ற இருவரும், கரைக்கு திரும்பி வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், வடுவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் மன்னார்குடி தீயணைப்பு நிலைய அலுவலர்களுடன் வந்த போலீசார், குளத்தில் இறங்கி சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் மகேந்திரன், டேனியல் ஆகிய இருவரும் உயிரிழந்த நிலையில், அவர்களது உடல்கள் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட இருவரது உடல்களும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com