\
சோதனையில் சிக்கிய பைகள்
சோதனையில் சிக்கிய பைகள்pt web

எம்.பி ஜெகத்ரட்சகன் வீட்டில் சிக்கிய இரண்டு கருப்பு பைகள்; அதில் இருந்ததென்ன?

ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் இரண்டு கருப்பு நிற பைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
Published on

ஜெகத்ரட்சகனின் அடையாறு இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோல், சென்னை பள்ளிக்கரணையில் உள்ள பாலாஜி பல் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி, குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை, பாலாஜி மருத்துவமனை, திருநீர்மலை, லட்சுமிபுரத்தில் ஜெகத்ரட்சகனின் உறவினரான தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ் வீடு, சேலையூர் பாரத் பல்கலைக்கழகம், வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் உள்ள தாகூர் கல்லூரியிலும் மூன்றாவது நாளாக சோதனை நடைபெற்றது.

இந்த சோதனை இன்று பிற்பகலில் நிறைவு பெற்றது. இந்த சோதனையில் இரண்டு கருப்பு பைகள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப்பைகளில் ஆவணங்கள் இருந்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com