ஆட்டோவில் பாலியல் தொல்லை - இருவர் கைது!
கிளாம்பாக்கத்தில் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை அளித்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் சென்னையில் தனது சக தோழிகளுடன் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், சேலத்திலிருந்து சென்னை மாதவரம் செல்வதற்காக நேற்று இரவு 11 மணி அளவில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்துள்ளார்.
அங்கே நின்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் மாதவரத்தில் அப்பெண்னை இறக்கி விடுவதாக வழுக்கட்டாயமாக ஏற்றியுள்ளார். பிறகு, தனது நண்பர்கள் இருவருக்கு ஆட்டோ ஓட்டுநர் தகவல் கொடுத்துள்ளார். இதனை அறிந்த அப்பெண், தனது உறவினர்களுக்கு help என்று குறுச்செய்தியை அனுப்பி, தனது லைவ் லொக்கேஷனையும் அனுப்பியுள்ளார்.
பிறகு போலீஸிக்கு தகவல் கொடுக்கப்பட்டநிலையில், அந்த ஆட்டோவை சேஸ் செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்த அந்த நபர்கள், கோயம்பேடு பின்புறத்தில் அந்த பெண்ணை நள்ளிரவு 12.30 இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.
பிறகு அவ்வழியே வந்த வேறு ஒரு ஆட்டோ ஓட்டுநர் அப்பெண் அழுதுகொண்டிருப்பதை கண்டு போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தற்போது சிறுமிக்கு காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனைத்தொடர்ந்து, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியில் தாம்பரம் காவல்துறையினர் ஈடுபட்டார்.
இந்த நிலையில், தற்போது ஆட்டோ ஒட்டுநர் முத்தமிழ்செல்வன் மற்றும் தயாளன் ஆகிய இருவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில்.. கைது செய்யப்பட்டுள்ள தயாளன் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது.