“மீண்டு வா சுஜித்..” - பிரார்த்திக்கும் தமிழகம்

“மீண்டு வா சுஜித்..” - பிரார்த்திக்கும் தமிழகம்

“மீண்டு வா சுஜித்..” - பிரார்த்திக்கும் தமிழகம்
Published on

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித் மீட்கப்படுவது தொடர்பாக ட்விட்டரில் பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். பெற்றோரின் சொந்த இடத்தில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி 13 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், ‘#PrayforSurjith’, ‘#SaveSujith’ உள்ளிட்ட ஹேஸ்டேக்கில் பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள்  தங்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “7மணி நேரமாக மீட்புபணி தொடர்கிறது.. நெஞ்சம் பதபதைக்கிறது. விரைவில் மீட்கப்படவேண்டும் இறைவா” எனப் பதிவிட்டு இருந்தார். 

அதேபோல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “குழந்தை பத்திரமா உயிரோட மீட்கப்படணும். மீண்டு வா சுஜித்” எனப் பதிவிட்டு தனது நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளார்.  மேலும் பல பொதுமக்கள் தங்களின் நம்பிக்கையை ட்விட்டரில் வெளிப்படுத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com