
திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளைச் சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்த ஐந்து வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர்களிடம் திருச்சி தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஒரு வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் தனிப்படை போலீசாரை கண்டு மாடியிலிருந்து குதித்து தப்பியோட முயன்ற போது கால் உடைந்து காயமடைந்தார். உடனடியாக அந்த இளைஞரை மீட்டு போலீசார் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அதனால், விசாரணையில் அடுத்ததாக முக்கியமான தகவல்களை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.