மதுரை| 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்.. '475' எடுத்து அசத்திய இரட்டை சகோதரிகள்!
தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் ஸ்ரீ சாரதா வித்யா வனம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இரட்டையர்களான சகோதரிகள் மாயாஸ்ரீ, மகாஸ்ரீ இருவரும் 475 என ஒரே மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளனர்.
அசத்திய இரட்டை சகோதரிகள்..
மதுரை திருப்பாலை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமரவேலின் மகள்கள் மாயாஸ்ரீ, மகா ஸ்ரீ என்ற இட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண்களை பெற்றதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஒரே பள்ளியில் பயின்று ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதி இரட்டையர்களான மதுரை சகோதரிகள் ஒரே மதிப்பெண் பெற்றது ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதாகவும், இரட்டையர்கள் என்பதால் ஒரே மதிப்பெண்ணை எடுத்தீர்களா என உறவினர்கள் கேட்டதாக கூறினர்.
தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் என ஐந்து பாடங்களில் மதிப்பெண்கள் வெவ்வேறாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக இருவரும் ஒரே மதிப்பெண்ணாக 475-ஐ பெற்றுள்ளனர். இருவரும் பயோமேக்ஸ் பிரிவு எடுத்து நீட் தேர்வெழுதி மருத்துவராகுவது தான் லட்சியம் என தெரிவித்துள்ளனர்.