\
சொகுசு விடுதிக்கு ரூ.18 லட்சம் வாடகை கொடுத்த டிடிவி தரப்பு

சொகுசு விடுதிக்கு ரூ.18 லட்சம் வாடகை கொடுத்த டிடிவி தரப்பு

சொகுசு விடுதிக்கு ரூ.18 லட்சம் வாடகை கொடுத்த டிடிவி தரப்பு
Published on

புதுச்சேரி விடுதியில் தங்கியிருந்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், விடுதியை காலி செய்துவிட்டு மைசூரை அடுத்த கூர்க் மலைப்பகுதிக்கு சென்றனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்ததாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்தனர். தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள வேறு ஒரு விடுதிக்கு மாறிய அவர்கள், மீண்டும் பழைய விடுதிக்கு திரும்பினர். இந்நிலையி்ல், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் மைசூரை அடுத்துள்ள கூர்க் மலைப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்குள்ள சொகுசு விடுதியில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் தங்கியிருந்த சொகுசு விடுதிக்கு வாடகையாக 18 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com