விஜய் ராம்ப் வாக் மேடை
விஜய் ராம்ப் வாக் மேடைPT - News

TVK Vijay Madurai Conference|செல்ஃபி பாயிண்ட்டாக மாறிய விஜய் ராம்ப் வாக் மேடை..!

மதுரையில் தயாராகும் விஜய் நடக்க போகும் ராம்ப் வாக் மேடையை தற்போது செல்ஃபி எடுக்கும் இடமாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தகக்து..
Published on
Summary

மதுரையில் நடைபெறும் தவெக மாநாடு, விஜய் ரசிகர்களால் சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. 300 மீட்டர் நீள ராம்ப் வாக் மேடையில் செல்ஃபி எடுத்து, அதை செல்ஃபி பாயிண்ட்டாக மாற்றியுள்ளனர். மாநாட்டுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற, விஜய் ரசிகர்கள் இப்போதே படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

மதுரையில் தவெக மாநாடு நடைபெறும் பாரபத்தி பகுதி, திடீரென சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. அதில் விஜயின் ரசிகர்கள் செல்ஃபி எடுத்து விஜய்யின் ராம்ப் வாக் மேடையை செல்ஃபி பாயிண்ட்டாக மாற்றியுள்ளனர்.

மதுரையில் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள மாநாட்டுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், அதனை காண விஜய் ரசிகர்கள் இப்போதே படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். விஜய் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட 300 மீட்டர் நீளம் கொண்ட ராம்ப் வாக் மேடை மற்றும் மாநாட்டு மேடை பகுதிகளை, தொண்டர்களும் ரசிகர்களும் செல்ஃபி பாயிண்ட்டாகவே மாற்றிவிட்டனர்.

தவெக மாநாட்டுத் திடல்..செல்ஃபி பாயிண்ட்டாக மாறிய விஜய் ராம்ப் வாக் மேடை
தவெக மாநாட்டுத் திடல்..செல்ஃபி பாயிண்ட்டாக மாறிய விஜய் ராம்ப் வாக் மேடைPT News

ஆங்காங்கே நின்று புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். இதனிடையே, மாநாட்டு பணிகளை ஆய்வு செய்ய வந்த தவெகவின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை கண்டு பூரித்துப்போன தொண்டர்கள், அவருடனும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

ஏற்கெனவே விஜய் நடத்திய முதல் மாநாட்டில் அந்த மேடையில் விஜய் நடந்து வந்தபோது ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று அவரை வரவேற்று அவருடன் போட்டோ மற்றும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com