TVK to Release Election Manifesto on March 8
விஜய்pt

இலவச லேப்டாப் டு இணையச் சேவை வரை.. மார்ச் 8 தேர்தல் அறிக்கையை வெளியிட தயாராகும் தவெக!

வாக்கு அரசியலில் முதன்முறையாகக் களம் காணவுள்ள தவெக, சர்வதேச மகளிர் தினமான வரும் மார்ச் 8ஆம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது.
Published on

அரசியல் களத்தில் இதர கட்சிகளுடன் பரபரப்பாக இயங்கி வரும் தவெக, விரைவில் தேர்தல் அறிக்கையை வெளியிட இருக்கிறது. அந்த வகையில், உழைக்கும் வர்க்கத்தை மையமாகக் கொண்டு, குறிப்பாக விவசாயம், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

விரைவில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. கட்சிகள் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தையிலும் தொகுதிப் பங்கீடு பற்றிய ஒப்பந்தங்களிலும் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும், தேர்தல் அறிக்கைகளும் வெளியிட்டு வருகின்றன. ஏற்கெனவே அதிமுக மகளிரை ஈர்க்கும் வகையில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அதேநேரத்தில், திமுக இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடாத நிலையில், பழைய திட்டங்களில் தொகையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், வாக்கு அரசியலில் முதன்முறையாகக் களம் காணவுள்ள தவெக, சர்வதேச மகளிர் தினமான வரும் மார்ச் 8ஆம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது. ஆட்சியில் பங்கு தருவதாக அறிவித்தும், எந்தக் கட்சிகளும் தவெகவுடன் கூட்டணி வைக்காத நிலையில், தனித்துப் போட்டியிடுவதற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

TVK to Release Election Manifesto on March 8
விஜய்pt desk

அரசியல் களத்தில் இதர கட்சிகளுடன் பரபரப்பாக இயங்கி வரும் தவெக, விரைவில் தேர்தல் அறிக்கையை வெளியிட இருக்கிறது. அந்த வகையில், உழைக்கும் வர்க்கத்தை மையமாகக் கொண்டு, குறிப்பாக விவசாயம், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது. மாணவர்களுக்கு இலவச கையடக்க கணினி, இணையச் சேவை உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் தினத்தில் இதனை வெளியிடுவதன் மூலம் பெண் வாக்காளர்களைக் கவர விஜய் திட்டமிட்டுள்ளார். ஏற்கெனவே 5 மண்டலங்களில் கருத்துக்கேட்பு நடத்தி தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

TVK to Release Election Manifesto on March 8
தவெக | தஞ்சையில் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு.. என்ன பேசப்போகிறார் விஜய்.?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com