\
தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்pt web

தவெக மாநாடு.. காவல்துறையின் 21 கேள்விகள்.. கட்சி தரப்பில் வெளியான முக்கிய தகவல்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தொடர்பான காவல்துறையின் கேள்விகளுக்கு நாளைக்குள் பதில் அளிக்கப்படும் என அக்கட்சி நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின், முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் வருகிற 23ஆம் தேதி நடத்த அக்கட்சி திட்டமிடப்பட்டுள்ளது. மாநாடு நடத்த அனுமதி கோரி, விழுப்புரம் ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

TVK | Vijay | BussyAnand
TVK | Vijay | BussyAnand

இந்நிலையில், மாநாட்டிற்கு பார்க்கிங் வசதி, எவ்வளவு பேர் பங்கேற்பார்கள், குடிநீர் வசதி, ஆம்புலன்ஸ் வசதிக்கு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன உள்ளிட்ட 21 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு, கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்திற்கு, விழுப்புரம் டிஎஸ்பி கடிதம் அனுப்பியுள்ளார்.

தவெக தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழக மாநாடு அனுமதி மனு - அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய தமிழ்நாடு காவல்துறை!

காவல்துறை மூலம் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு, பதில் தயார் செய்யும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் குழுவுடன் ஆலோசனை நடத்தி நாளைக்குள் பதில் அளிக்கப்படும் என தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com