\
அருள் விக்னேஷ்
அருள் விக்னேஷ்file photo

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ்க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

பெண் அதிகாரிக்கு ஆட்சேபனைக்குரிய குறுஞ்செய்திகள் அனுப்பி, பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

பெண் அதிகாரி ஒருவருக்கு எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆட்சேபனைக்குரிய வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகப் புகார் எழுந்தது. கடந்த ஜூலை மாதமே இச்சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக திமுக, அதிமுக அரசியல் கட்சிகள் அருள் விக்னேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தின. ஆங்காங்கு போராட்டங்களும் நடைபெற்றன. சமூக வலைதளங்களிலும் இந்த விவகாரம் தொடர்பாக பெரும் விவாதம் எழுந்தது..

Arul Vignesh
Arul Vignesh ANI

இதற்கிடையே , கடந்த நவம்பர் 23-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெண் அதிகாரி புகார் அளித்தார். இதையடுத்து, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.தேசிய மகளிர் ஆணையமும் தானாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டு, மூத்த காவல்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதற்காக திருப்பூர் எஸ்.பி. சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாகவும், ஐஜி என். காமினி மேற்பார்வை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டனர்.

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ்
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ்file photo

மேலும், புகார் குறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட உள்ளகப் புகார் குழுவையும் தமிழக அரசு அமைத்தது. 60 நாட்களுக்குள் விசாரணையை முடித்து, பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் உரிய நடவடிக்கையைப் பரிந்துரைக்க உத்தரவிடப்பட்டது.

பாதிக்கப்பட்ட அதிகாரி நீதிமன்ற நடுவரிடம் ரகசிய வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து, போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அருள் விக்னேஷ் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

அருள் விக்னேஷ்
ரஷ்ய அதிபர் புதினுடன் செல்ஃபி! வைரலாகும் இந்தியாவின் AI சிறுவன்!

தொடர்ந்து தியாக துருகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் வைத்து 5 மணி நேரம் அருள் விக்னேஷிடம் விசாரனை செய்யப்பட்டது.

தொடர்ந்து கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் உடற்தகுதி சான்றிதழ் பெறப்பட்டு கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலுள்ள குடியிருப்பில் நீதிபதி பானுமதியிடம் தவெக எம் எல்  ஏவை ஆஜர்படுத்தினர். அப்போது நீதிமன்ற வாயில் முன்பாக தவெக வழக்கறிஞர்கள் மூவர் தங்களை நீதிமன்றத்திற்குள் அனுமதிக்ககோரி போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இவ்வழக்கினை விசாரனை செய்த நீதிபதி   எம் எல் ஏவை டிசம்பர் 11 ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து எம் எல் ஏ கடலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.