TVK man arrested for posting his vote as an Instagram Reel
TVK man arrested for posting his vote as an Instagram Reelweb

வாக்கு செலுத்தியதை வீடியோ வெளியிட்டு Case-ல் சிக்கிய TVK தொண்டர்.!

வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் காட்சியை செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த TVK தொண்டர் மீது தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on
Summary

தேனி பெரியகுளம் தொகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்த நிலையில், வாக்குச்சாவடிக்குள் செல்போன் தடை விதி மீறப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர், தாம் யாருக்கு வாக்களித்தார் என்பதை வீடியோவாக பதிவு செய்து வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்தது தேர்தல் விதிமுறைகள் மீறலாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தனித் தொகுதியில் வாக்குப்பதிவின் ஆரம்ப நேரத்திலிருந்தே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக உரிமையை பயன்படுத்தினர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்ட நிலையில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் காவல்துறை கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

voting machine
voting machine X

வாக்காளர்கள் தங்கள் விருப்பமான வேட்பாளருக்கு உற்சாகமாக வாக்களித்தனர். பல இடங்களில் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் பங்கேற்றனர்.

இந்நிலையில், வாக்குப்பதிவு அறைக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த விதிமுறையை கடைப்பிடிக்க அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர்.

அத்தகைய கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், பெரியகுளம் தொகுதியில் சிலர் விதிமுறைகளை மீறிய சம்பவம் வெளியாகியுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஒருவர் வாக்கு செலுத்தும் காட்சியை செல்போனில் பதிவு செய்துள்ளார்.

மேலும், அவர் தாம் எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பரவியது.

voting mahin and VVPAT
voting mahin and VVPATweb

இது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயலாக இருப்பதால், சம்பவம் குறித்து தேர்தல் அதிகாரிகள் கவனம் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கும் தகவல் வழங்கப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்களுக்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்தச் சம்பவமும் அதே வகையில் பரிசீலிக்கப்பட்டது.

இதையடுத்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, வீடியோ வெளியிட்ட நபரை அடையாளம் கண்டனர். அவர் தேவதானப்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் என தெரியவந்தது.

vignesh , TVK
vignesh , TVK web

இதன் பேரில், தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இதுபோன்ற விதிமுறை மீறல்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com