மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.... மாண்புமிகு மோடி ஜி அவர்களே.. நேருக்கு நேர் சீண்டிய விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைப்பெற்று வருகிறது.
இதில் பேசிய தவெக தலைவர் விஜய், “ என் நெஞ்சில் குடியிருக்கும் என் தோழர் தோழிகளுக்கு வணக்கம்... கதறல் சத்தம் எல்லாம் எப்படி இருக்கு?.
அரசியல் என்றால் என்ன?.. ஒவ்வொரு குடும்பமும் நன்றாக வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா? இல்லை... ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி வாழ வேண்டும் என்பது அரசியலா?. தமிழ்நாட்டில் அனைத்து குடும்பங்களும் சிறப்பாக வாழ வேண்டும் என்பதே தவெகவின் அரசியல். தவெக நிகழ்ச்சியை நடத்திவிடக் கூடாது என்று ஏராளமான தடைகள் உருவாக்கப்படுகின்றன.
மாநாட்டில் தொடங்கிய, புத்த வெளியீட்டு விழா, பரந்தூர், இரண்டாம் ஆண்டு துவக்க விழா , பொதுக்குழு வரை எத்தனை தடைகள்.. ஆனால், அத்தனை தடைகளை தாண்டி, தோழர்கள் சந்திப்பு, மக்கள் சந்திப்பு என எல்லாமும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும், தொடர்ந்து நடக்கும்.
மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. மாண்புமிகு திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பெயரில் மட்டும் வீராப்பாக சொன்னால் போதாது அவர்களே.. செயலையும் ஆட்சியிலையும் அதை காட்டணும் அவர்களே.. பாஜக ஆட்சியை பாசிசம் என்று சொல்லும் நீங்கள் , தமிழ்நாட்டிலும் நீங்கள் நடத்தும் ஆட்சி என்ன?.. நேற்றுவந்தவன் எல்லாம் முதலமைச்சராகும் கனவு காண்கிறார் என்கிறீர்கள்.. அது நடக்கவே நடக்காது என்று சொல்றீங்க.. அப்போ எதற்கு எந்த கட்சிக்கும் இல்லாத நெருக்கடியை தமிழக வெற்றிக்கழகத்திற்கு போடுகிறீர்கள்.
கழக தோழர்களையும் என் நாட்டு மக்களையும் சந்திக்க தடை போட நீங்கள் யார்? தடையை மீறி போகணும்தான் நான் போயே தீர்வேன். சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நான் அமைதியாக இருக்கிறேன்.
அணை போட்டு ஆத்த வேணும்னா தடுக்கலாம்... காற்றை தடுக்க முடியாது... அதையும் மீறி தடுக்க நினைத்தால், சாதாரண காத்து சூறாவளியாக மாறும். ஏன்?.... சக்திமிக்க புயலாக கூட மாறும்.
சட்டம் ஒழுங்கு என ஒன்று இருப்பதாக தெரியவில்லை..அதற்கு எல்லாம், இந்த கரெக்ஷன் கபடதாரிகள்தான் காரணம். இந்த நிலை மாறணும். அதற்கு உண்மையான மக்களாட்சி மலறணும். அது நடக்க இவங்கள மாத்தணும். அதற்கு நாம என்ன செய்யணும், மக்கள போய் பாருங்கள் அவங்களோட பிரச்னை கேட்டு தீர்க்க வழி தேடுங்கள்..
இந்த ஆழமான நம்பிக்கையை விதைத்து விட்டு பாருங்கள். ஒவ்வொரு வீட்டிலும் தவெகவின் கொடி தானாக பரக்கும். மகளிருக்கு எதிரான வன்கொடுமையை சொல்ல முடியவில்லை.. இதில் உங்களை அப்பா என்று சொல்வதாக கூறுகிறீர்கள்.. திமுக ஆட்சிக்கு, அரசியலுக்கும் என் சகோதரிகளான தமிழ்நாடு பெண்கள் முடிவு கட்டப் போகிறார்கள்.
கேள்வி கேட்டால் ஏன் கோபம் வருகிறது. விமர்சித்தால் கோப்படுகிறார் மன்னராட்சி முதல்வர். இங்க நீங்கதான் இப்படி நா... அங்க அவங்க.. உங்க சீக்கரட் ஓனர்.
தமிழ்நாட்டிடம் விளையாடாதீர்கள் பிரதமர் சார்.
மாண்புமிகு மோடி ஜி அவர்களே.. பெயர் சொல்லவில்லை என்று கேட்கிறீர்கள்.. உங்கள் பெயரை உச்சரிப்பதில் எனக்கு எதோ பயம் போல கூறுகிறீர்கள். நான் ஒரு திரைப்படத்தில் கூறுவேனே.. ’நான் லியோவ பார்க்கணும், லியோவ பார்க்கணும், லியோவ பார்க்கணும் னு ‘ என்று அப்படிதான் இருக்கிறது .
மத்திய ஆளுபவர்கள் என்று கூறுகிறோம்.. அங்கு என்ன காங்கிரஸா ஆளுகிறார்கள்?.. மாநிலத்தில் ஆளுபவர்கள் என்று கூறுகிறோம், இங்க என்ன அதிமுக வ ஆளுகிறார்கள்?.. பின்ன என்ன பெயரை குறிப்பிடவேண்டும் என்கிறீர்கள்.. நீங்கள்தான் கேட்டீர்கள் வைத்துக்கொள்ளுங்கள்.
ஓட்டுக்காக காங்கிரஸ் உடன் கூட்டணி.. ஊழலுக்காக உங்களுடன் ( பாஜக) கூட்டணி .. இப்படி மறைமுகமாக உதவும் உங்கள் அரசுக்கு (பாஜக) ஏன் ஜி தமிழ்நாடு தமிழர்கள் என்றாலே உங்களுக்கு அலர்ஜி..
தமிழ்நாட்டிலிருந்து வரும் ஜிஎஸ்டியை வாங்கிக்கறீங்க.. ஆனால் நிதி கொடுக்க மாட்டீங்கிறீங்க. பலருக்கு தண்ணீர் காட்டிய மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டிடம் விளையாடாதீர்கள் பிரதமர் சார். விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம். தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை, உரிமை. எங்கள் அரசியலை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.
அடுத்த வருடம் தமிழ்நாடு இதுவரை சந்திக்காத ஒரு தேர்தலை தமிழ்நாடு சந்திக்கும். இரண்டு பேருக்கு நடுவில் மட்டும்தான் போட்டியே.. ஒன்று tvk, இன்னொன்று dmk" என்று பேசியுள்ளார்.