தவெக தலைவர் விஜய் பரப்புரை
தவெக தலைவர் விஜய் பரப்புரைpt

நாளை விஜய் பரப்புரை| நாகை, திருவாரூரில் எப்போது பேசுகிறார்..? வெளியான நேர விபரம்!

நாகை, திருவாரூரில் தவெக தலைவர் விஜயின் நாளைய பரப்புரை நேர விபரம் வெளியாகியுள்ளது.
Published on

றார்2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்வதற்கு அனைத்து கட்சியினரும் தீவிரமான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் மக்களை சந்திப்பதிலும் பரப்புரை பயணங்களிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” எனும் பெயரில் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

தவெக தலைவர் விஜய் பரப்புரை
தவெக தலைவர் விஜய் பரப்புரைpt web

முதற்கட்டமாக கடந்த சனிக்கிழமை (செப். 13) அன்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களில் பரப்புரை நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், திருச்சி, அரியலூர் என இரு மாவட்டங்களில் மட்டுமே பரப்புரை நடந்தது. பெரம்பலூரில் பரப்புரை மேற்கொள்ள முடியாமல்போனதற்கு தொண்டர்களிடம் வருத்தம் தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார் விஜய்.

இரண்டாம் கட்ட பரப்புரை.. எங்கு? எப்போது?

இந்நிலையில் தவெக தலைவர் விஜயின் இரண்டாம் கட்ட பரப்புரை நாளை நடைபெற இருக்கிறது. நாளை (செப். 20) நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பரப்புரை நடைபெற இருக்கிறது. நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர் ரவுண்டனா, புத்தூர் ரவுண்டனா, அபிராமி அம்மன் சன்னதி, அவுரி திடல், காடம்பாடி மைதானம், நாகூர் புதிய பேருந்து நிலையம், வேளாங்கண்ணி ஆர்ச் உள்ளிட்ட 7 இடங்களில் அனுமதி கோரப்பட்ட நிலையில், புத்தூர் ரவுண்டனா அருகே காவல்துறை அனுமதி அளித்திருந்தது. மேலும், புத்தூர் அண்ணா சிலை அருகே விஜய் உரையாட இருக்கிறார்.

இந்நிலையில், நாகை, திருவாரூரில் தவெக தலைவர் விஜயின் நாளைய பரப்புரை நேர விபரம் வெளியாகியுள்ளது. கூடவே, காவல்துறை விதித்த 20 நிபந்தனைகள் குறித்த விபரமும் வெளியாகியிருக்கிறது.

நாகையில் புத்தூர் அண்ணா சிலை அருகே நாளை காலை 11 மணிக்கு விஜய் பரப்புரையை தொடங்க இருக்கிறார். திருவாரூர் நகராட்சி அருகே நாளை மாலை 3 மணிக்கு விஜய் பேச இருக்கிறார். விஜய் பரப்புரை மேற்கொள்ள இருப்பதையொட்டி கமலாலயம் குளம் பகுதியில் தடுப்பு அரண், கொடிகள் போன்றவற்றை தவெகவினர் அமைத்து வருகின்றனர்.

காவல்துறை நிபந்தனைகள் என்ன?

நாகையில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள மாவட்ட காவல்துறை 20 நிபந்தனைகள் விதித்துள்ளது. அதன்படி,

  • மதியம் 12:25 முதல் ஒரு மணி வரை நிகழ்ச்சியை முடித்திட வேண்டும்

  • வரவேற்பு கொடுக்க உள்ள வாஞ்சூர் ரவுண்டானா பகுதி தமிழ்நாடு புதுச்சேரி எல்லை என்பதால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது

  • விஜய் செல்வம் கேரவன் வாகனத்தின் பின்னால் ஐந்து வாகனங்களுக்கு மேல் செல்லக்கூடாது. அந்த வாகனத்தின் முன்பாகவோ பின்பாகவோ இரு சக்கர வாகனம் கார் அல்லது நடந்தோ செல்லக்கூடாது.

  • விஜய் பயணம் செய்யும் சாலையில் பிரதான இரண்டு கட்சிகள் இருப்பதால் அங்கு பிரச்சனைகள் வராத வண்ணம் தன்னார்வலர்களை வைக்க வேண்டும்

  • பரப்புரையின் போது வரக்கூடிய வாகனங்களுக்கு தாங்களே பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

  • பெண்கள் மற்றும் பெரியவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ள வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

  • பரப்புரையில் கலந்து கொள்ளும் எவரும் கையில் கம்பு குச்சி மற்றும் பிற ஆயுதங்கள் எதையும் வைத்திருத்தல் கூடாது

  • பரப்புரை என்பது அரசு மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது அப்படி ஏற்படுத்தினால் அந்த கட்சியினரே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்

  • புத்தூர் அண்ணா சிலை பகுதியில் ரயில்வே கேட்டிருப்பதால் ரயில் பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது

  • புத்தூர் பகுதியில் உள்ள அண்ணா பெரியார் சிலை தடுப்புகள் ஆகியவற்றின் மீது ஏறிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது

  • உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலையிலும் மற்ற சாலைகளிலும் இரு புறங்களிலும் விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com