தவெகவின் ‘வெற்றி பேரணியில் தமிழ்நாடு’ | மலைக்கோட்டை நகரில் மக்களை சந்திக்கும் விஜய்..?
வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பை நடத்தவிருக்கும் நிலையில், முதற்கட்டமாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் 13ஆம் தேதி முதல் மக்கள் சந்திப்பை மேற்கொள்கிறார். உங்கள் விஜய்; வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் விஜய் நடத்தும் சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகளை தவெகவினர் மேற்கொண்டுள்ளனர்.
மலைக்கோட்டை நகரில் மக்கள் சந்திப்பு
விஜயின் பரப்புரைக்காக அனுமதி கோரி திருச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு அளித்தனர். திருச்சியில் 4 முக்கிய பகுதிகளில் விஜய்பேசும் வகையில் திட்டமிடப்பட்டு அனுமதி கோரப்பட்ட நிலையில், அதற்குகாவல் துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேறுஇடங்களை தேர்வு செய்து வருமாறு தவெகவினருக்கு காவல் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் விஜய் பரப்புரைக்கு அனுமதி கேட்டு, தவெக சார்பில் காவல்துறையினரிடம் மனுஅளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்.பிவிஷ்வேஷ் பா.சாஸ்திரியை சந்தித்த ஆனந்த், அனுமதி கோரி கடிதம்அளித்தார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு புன்னகை மட்டுமே பதில் என ஆனந்த் கூறி சென்றார்.
13ஆம் தேதி திருச்சியில் மக்கள் சந்திப்பை தொடங்கும் விஜய், தொடர்ச்சியாக அரியலூர், குன்னம்,பெரம்பலூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.