தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்pt desk

”யாரும் களத்திற்கு செல்ல தயங்க கூடாது.. 2026 இலக்கை அடைய அனைத்தையும் செய்வேன்!” – தவெக தலைவர் விஜய்

2026 இலக்கை அடைய நான் என்ன செய்ய வேண்டுமோ அதை நான் செய்கிறேன், நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை நீங்கள் செய்யுங்கள் என தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
Published on

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து அதிரடி காட்டி வரும் விஜய், மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் பணியில் இறங்கியுள்ளார்.

இதற்காக பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்டப் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி பொறுப்புகள் வழங்கப்பட்டுவருகிறது. கட்சியின் அடிப்படை கட்டமைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள விஜய், தேர்வு செய்யப்பட இருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்களை தனித்தனியாக நேர்காணல் நடத்தி பொறுப்புகளை வழங்கிவருகிறார்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்புதிய தலைமுறை

சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாக கழகமானது பிரிக்கப்பட்டுள்ள நிலையில், பல கட்டங்களாக பிரிக்கப்பட்டு மாவட்டப் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இரண்டு கட்டங்களாக பொறுப்புகள் வழங்கப்பட்ட நிலையில், இன்று மூன்றாம் கட்டமாக 19 மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2026 இலக்கை அடைய நான் அனைத்தையும் செய்வேன்..

தவெக கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிப்பு மூன்றாம் கட்டமாக இன்று வழங்கப்பட்ட நிலையில்,19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்முகநூல்

இந்த நிகழ்வில் பேசிய விஜய், ”யாரும் களத்திற்கு செல்ல தயங்க கூடாது, களத்தில் இறங்கி மக்கள் பணிகளை இனி தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். உங்கள் உழைப்பில் தான் இந்த கட்சியின் வளர்ச்சி உள்ளது. நானும் உழைக்கிறேன் நீங்களும் உழையுங்கள், வெற்றி அடைவோம்.

2026 இலக்கு வைத்துள்ளோம், இலக்கை நோக்கி இலக்கை அடைய என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்கிறேன், உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை நீங்கள் செய்யுங்கள்” என பேசியுள்ளார்.

புதிய பொறுப்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

தவெக கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் குறித்து விவரங்கள் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தவெக தலைவர் விஜய் வெளிப்படுத்தியுள்ளார்.

அதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், தமிழக வெற்றிக் கழகத்தின் அமைப்பு ரீதியிலானக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலும், வலுவானத் தேர்தல் பிரசாரக் கட்டமைப்பை உருவாக்கும் வகையிலும் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

அதன்படி ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ஜெகதீஷ், ராஜ்மோகன், லயோலா மணி உள்ளிட்டோருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

கட்சி பொறுப்பாளர்கள் விவரம்:

1. திரு. ஆதவ் அர்ஜுனா B.A. (Political science) - தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர்

2. திரு. CTR. நிர்மல் குமார் B.E., LLB. - துணைப் பொதுச்செயலாளர் (தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு)

3. திரு. P.ஜெகதீஷ் - தலைமைக் கழக இணைப் பொருளாளர்

4. திரு. A.ராஜ்மோகன் - கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர்

5. திரு. லயோலா மணி (எ) A.மணிகண்டன் M.A. - கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்

6. பேராசிரியர் திரு. A.சம்பத்குமார் MBA., M.Phil., Ph.D. - கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்

7. திருமதி. J.கேத்ரின் பாண்டியன் M.A., B.Ed. - கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்

8. திரு. S.வீரவிக்னேஷ்வரன் B.E. - செய்தித் தொடர்பாளர்

9. திரு. S.ரமேஷ் B.E. - இணைச் செய்தித் தொடர்பாளர்

10. திரு. R.ஜெயபிரகாஷ் M.E., Ph.D. - தகவல் தொழில் நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்

11. திரு. A.குருசரண் DCE. - தகவல் தொழில் நுட்பப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

12. திரு. R.J.ரஞ்சன் குமார் B.E. - தகவல் தொழில் நுட்பப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

13. திரு. திரு. R.குருமூர்த்தி BBA. - சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்

14. திரு. R. ராம்குமார் BCA. - சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

15. 8. P. D.EEE.. BE (EEE). - சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

16. திரு. R.நீரேஷ் குமார் - சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

17.திரு. S.அறிவானந்தம் M.A., M.Ed. - சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

18. B.விஷ்ணு - சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

19. திருமதி. A.ஃப்ளோரியா இமாக்குலேட் B.A. - சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com