புதுச்சேரி மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க சென்னையிலிருந்து புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்pt
தமிழ்நாடு
தவெக| புதுச்சேரியில் இன்று மக்கள் சந்திப்பு கூட்டம்.. புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்!
புதுச்சேரியில் இன்று மக்கள் சந்திப்பு கூட்டம் நடக்கவிருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களை சந்தித்து பேசவுள்ளார்.
புதுச்சேரியில் இன்று நடைபெறும்மக்கள் சந்திப்பு கூட்டத்தில் தமிழகவெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கிறார். உப்பளம் பழைய துறைமுக மைதானத்தில் கூட்டம் நடக்கவிருக்கும் சூழலில், நான்கரை ஏக்கர் நிலத்தில் திடல் அமைக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய்Pt web
அத்துடன் காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி, குடிநீர், கழிவறை, வாகன நிறுத்துமிடம், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட போதிய ஏற்பாடுகளையும் தவெகவினர் செய்து வருகின்றனர். காவல் துறையினரும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
கூட்டத்தில் கலந்து கொள்ள 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி, தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை, சாலை வலம் நடத்தக்கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தசூழலில் புதுச்சேரி மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.

