தவெகவினர் கைதுக்கு விஜய் கண்டனம்
தவெக விஜய்pt

"இதுதான் ஜனநாயகமா? வெகுகாலம் மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்!" கைது குறித்து தவெக விஜய் கண்டனம்!

தவெக தொண்டர்கள் கைது செய்யப்பட்டது குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
Published on

அண்ணாப் பல்கலைக்கழக விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் பெண்களின் பாதுகாப்பு குறித்து கடிதம் ஒன்றினை எழுதி வெளியிட்டிருந்தார். மேலும், விஜய் எழுதிய கடிதம் நகலெடுக்கப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள பெண்களிடம் கொடுப்பட வேண்டும் என்று தவெக சார்பில் தெரிவிக்கப்படிருந்தது.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் விஜய்யின் கடிதத்தை துண்டு பிரசுரமாக விநியோகித்து வந்தநிலையில், சென்னையிலும் பல்வேறு இடங்களில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. அப்போது பூக்கடையில் போலீசார் தரக்கூடாது என மறுத்த நிலையில், போலீசாரிடம் த.வெ.க மகளிர் அணியினர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

இதனிடையே, அனுமதியின்றி துண்டுபிரசுரம் விநியோகம் செய்ததாக தவெக தொண்டர்களை கைது செய்த போலீசார் அவர்களை தி.நகரில் உள்ள திருமண மண்டபத்தில் தடுப்புக் காவலில் வைத்தனர். மேலும் கைது செய்யப்பட்ட தொண்டர்களை காணச்சென்ற பொதுச் செயலாளர் என்.ஆனந்தையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் பொதுச் செயலாளர் மற்றும் தொண்டர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கைது நடவடிக்கைக்கு விஜய் கண்டனம்..

தவெகவினரை போலீஸார் கைது செய்த நிலையில், கைது நடவடிக்கை குறித்து தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில், தமிழகத்துத் தங்கைகளுக்கு இன்று நான் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது. அதில், "எல்லாச் சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் உறுதியாக நிற்பேன், அண்ணனாகவும், அரணாகவும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

இக்கடிதத்தின் நகல்களைத் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமும் பெண்களிடமும் த.வெ.க. மகளிரணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். சென்னையில் பொதுமக்களிடம் இந்த நகல்களை எம் கட்சித் தோழர்கள் வழங்கவிடாமல் தடுத்த காவல் துறையினர், அவர்களைக் கைது செய்து, பின்னர் விடுவித்துள்ளனர். ஜனநாயக வழியில் பிரசுரங்களை விநியோகம் செய்ய முயன்றதற்காக அவர்களைக் கைது செய்தது கண்டனத்துக்கு உரியது.

கருத்துரிமை, பேச்சுரிமை அடிப்படையில், யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அறவழியில் மக்களைச் சந்தித்த எம் கட்சித் தோழர்களைக் கைது செய்வது தான் ஜனநாயகமா?

இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வெகு காலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்” என்று எழுதியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com