tvk leader vijay announced 19 post include aadhav arjuna nirmal kumar
aadhav arjuna vijay nirmal kumarPT

ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் பதவிகள் அறிவிப்பு; ஜான் ஆரோக்கியசாமி? - விஜய் வெளியிட்ட முழுப்பட்டியல்!

தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Published on

விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் விசிக முன்னாள் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, அதிமுக ஐடி பிரிவு முன்னாள் இணை செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் இன்று இணைந்திருந்த நிலையில் அவர்களுக்கான பொறுப்புகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 19 பேருக்கான பொறுப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியிருக்கிறது. இதில் ஜான் ஆரோக்கியசாமிக்கான பொறுப்பு என்ன என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

தமிழக வெற்றிக் கழகத்தின் அமைப்பு ரீதியிலானக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலும். வலுவானத் தேர்தல் பிரசாரக் கட்டமைப்பை உருவாக்கும் வகையிலும் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

புதிய பொறுப்பாளர்கள் பற்றிய விவரம்:

1. திரு. ஆதவ் அர்ஜுனா B.A. (Political sciener) - தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர்

2. திரு. CTR. நிர்மல் குமார் B.E.. L.L.B. - துணைப் பொதுச்செயலாளர் (தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு)

3. திரு. P.ஜெகதீஷ் தலைமைக் கழக இணைப் பொருளாளர்

4. திரு. A.ராஜ்மோகன் கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர்

5. திரு. லயோலா மணி (எ) A.மணிகண்டன் M.A. கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்

6. பேராசிரியர் திரு. A.சம்பத்குமார் MBA., M.Phil, Ph.D. கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்

7. திருமதி. J.கேத்ரின் பாண்டியன் M.A., B.Ed. கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்

8. திரு.S.வீரவிக்னேஷ்வரன் B.E. செய்தித் தொடர்பாளர்

9. திரு. S.ரமேஷ் B.E. இணைச் செய்தித் தொடர்பாளர்

10. திரு. R.ஜெயபிரகாஷ் M.E.. Ph.D. தகவல் தொழில் நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்

11. திரு. A.குருசரண் DCE. தகவல் தொழில் நுட்பப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

12 திரு. R.J.ரஞ்சன் குமார் B.E. தகவல் தொழில் நுட்பப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

13. திரு. திரு. R.குருமூர்த்தி BBA. சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்

14, திரு. R. ராம்குமார் BCA. சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

15. திரு. P.வெங்கடேஷ் D.EEE.. BE (EEE). சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

16. திரு. R.நிரேஷ் குமார் சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

17.திரு. S.அறிவானந்தம் M.A., M.Ed. சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்.

18. B.விஷ்ணு - சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

19. திருமதி. A.ஃப்ளோரியா இமாக்குலேட் B.A. - சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

மேற்கண்ட பொறுப்புகளில் நியமிக்கப்படுபவர்கள் அனைவரும் எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கிணங்க. கழகப் பொதுச்செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்களது வழிகாட்டுதலின்படி கழகப் பணிகளை மேற்கொள்வார்கள்.

கழகத் தோழர்களும். அனைத்து நிலை நிர்வாகிகளும் புதிய பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கானக் கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள். என்னுடைய அரசியல் வியூக வகுப்பாளர் திரு. ஜான் ஆரோக்கியசாமி அவர்களுடன் இணைந்து, அவரது அரசியல் வியூகங்களைப் பின்பற்றி, தேர்தல் பிரசாரங்களை வடிவமைத்து, தேர்தல் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்வார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com