குலுங்கும் கோவை.. அந்த பக்கம் விஜய்.. இந்த பக்கம் உதயநிதி! இருவரின் இன்றைய நிகழ்வுகள் என்ன?

கோவை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் தவெக தலைவர் விஜய் மற்றும் துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதியும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலை வரை திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவையில் இரண்டு நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்தகொள்கிறார். முதலாவதாக கோவையில் அமையவிருக்கும்

புதிய சர்வதேச ஹாக்கி மைதானத்தின் பணிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார். கோவை ஆர்.எஸ்.புரத்தில் இந்த ஸ்டேடியம் கட்டப்பட உள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த ஹாக்கி ஸ்டேடியம் (International Hockey Federation - IHF) விதிமுறைகளின் படி கட்டப்பட உள்ளது

அதனை தொடர்ந்து கோவை சிவானந்தா காலனியில் திராவிட இயக்க தமிழர் பேரவை மாநாடு சுப வீரபாண்டியன் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேச உள்ளார்.

கோவை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு நடத்தும் பணியில் அக்கட்சியின் தலைவர் விஜய் ஈடுபட்டுள்ளார். இரண்டு நாட்கள் திட்டமிடப்பட்ட இந்த நிகழ்வில் முதல் நாளான நேற்று பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com