தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் கைது
தவெக பொதுச் செயலாளர் ஆனந்த்PT

தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் திடீர் கைது.. என்ன நடந்தது?

துண்டுபிரசுர விநியோக விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தொண்டர்களை பார்க்க சென்ற தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
Published on

அண்ணாப் பல்கலைக்கழக விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் பெண்களின் பாதுகாப்பு குறித்து கடிதம் ஒன்றினை எழுதி வெளியிட்டிருந்தார். மேலும், விஜய் எழுதிய கடிதம் நகலெடுக்கப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள பெண்களிடம் கொடுப்பட வேண்டும் என்று தவெக சார்பில் தெரிவிக்கப்படிருந்தது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் விஜய்யின் கடிதத்தை துண்டு பிரசுரமாக விநியோகித்து வருகின்றனர்.

தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் கைது
ஆளுநரை சந்தித்த விஜய்... பேசியது இதுதான்! வெளியான அறிக்கை!

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கைது..

சென்னையிலும் பல்வேறு இடங்களில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. வகுப்பு முடித்து வெளியே வந்த மாணவிகளிடம் கொடுத்தனர். பூக்கடையில் போலீசார் தரக்கூடாது என மறுத்த நிலையில், போலீசாருடம் த.வெ.க மகளிர் அணியினர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

இதனிடையே, பூக்கடையில் துண்டுபிரசுரம் விநியோகம் செய்ததாக தவெக தொண்டர்களை கைது செய்த போலீசார் அவர்களை தி.நகரில் உள்ள திருமண மண்டபத்தில் தடுப்புக் காவலில் வைத்தனர்.

கைது செய்யப்பட்ட தொண்டர்களை காண பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அங்கு சென்றார். அப்பொழுது போலீசார் அவரையும் கைது செய்தனர். பின்னர், பொதுச் செயலாளரை விடுதலை செய்ய வேண்டும் என்று தொண்டர்கள் முழக்கமிட்டனர்.

தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் கைது
உப்பு போட்ட பொருளுக்கு ஒரு வரி உப்பு போடாத பொருளுக்கு ஒரு வரி: விந்தையான ஜிஎஸ்டி வரி - ப.சிதம்பரம்

பொதுச் செயலாளர் ஆனந்த் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலையில் அமர முயன்றவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com