ஆலோசனைக் கூட்டத்தில் ஆனந்த்
ஆலோசனைக் கூட்டத்தில் ஆனந்த்pt web

“பொறுப்புக்கு பணம் கொடுத்தாலோ, வாங்கினாலோ அடுத்த நிமிடமே நீக்கிடுவோம்..” - ஆனந்த் எச்சரிக்கை!

தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்டமைப்பு நிர்வாகிகள் நியமனத்திற்கு பணம் பெறுகிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் பொதுச்செயலாளர் ஆனந்த் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
Published on

தமிழக வெற்றிக் கழகம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கட்சியின் முதல் மாநாடு நடத்தப்பட்டது. 2026 ஆம் ஆண்டு தேர்தல்தான் இலக்கு என்பதை அக்கட்சியின் தலைவர் விஜய் பலமுறை தெரிவித்துள்ளார். அதற்குள் கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்த மாநிலம் முழுவதும் தவெகவினர் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக உறுப்பினர் சேர்க்கை துவங்கி, கொள்கை விளக்க மாநாடு, செயற்குழு கூட்டம், நிர்வாகிகளுடனான தொடர் ஆலோசனை என்று தமிழக வெற்றிக் கழகம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.

ஆலோசனைக் கூட்டத்தில் ஆனந்த்
“சீமானை காலி செய்ய பாஜகவே போதும்; வேறு யாரும் தேவையில்லை..” - மூத்த பத்திரிகையாளர் ஆ.கே. பேட்டி!

இந்நிலையில்தான், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் தவெக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார். அதில், “தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி பொறுப்புகளுக்கு பணம் வாங்குவதும் தவறு, கொடுப்பதும் தவறு. அப்படி நடைபெற்றது என தெரிய வரும் நபர்கள் உடனடியாக கட்சிகளில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என்பதை தெள்ளத்தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டத்தில் ஆனந்த்
“மிஷ்கின் பேசியதில் தவறு இருக்கு; கெட்டவார்த்தைக்கு நான் சப்போர்ட் செய்யல.. ஆனா” - குரு சோமசுந்தரம்!

என்.ஆனந்த் உரத்து சொல்லியத்தை கரகோஷம் எழுப்பி நிர்வாகிகள் வரவேற்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com