தவெக மாநாட்டிற்கு அழைத்த நிர்வாகிகள்
தவெக மாநாட்டிற்கு அழைத்த நிர்வாகிகள்pt desk

மதுரை: போக்குவரத்து ஆய்வாளரை வெற்றிலை பாக்கு வைத்து மாநாட்டிற்கு அழைத்த தவெக நிர்வாகிகள்!

தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு போக்குவரத்து ஆய்வாளரை வெற்றிலை பாக்கு வைத்து தவெக நிர்வாகிகள் அழைத்தனர்.
Published on

செய்தியாளர்: மணிகண்டபிரபு.

தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய், அதன் முதல் மாநில மாநாட்டை வரும் 22 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடத்த உள்ளார். இதற்கான ஆயத்த பணிகளில் தவெக நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி மாநாட்டின் அழைப்பிதழுடன் வெற்றிலை பாக்கு வைத்து பெண்கள் மற்றும் முதியவர்களை அழைத்து வருகின்றனர் தவெக-வினர்.

தவெக மாநாட்டிற்கு அழைத்த நிர்வாகிகள்
தவெக மாநாட்டிற்கு அழைத்த நிர்வாகிகள்pt desk

இதில் மதுரை பாண்டி கோவில் பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலருக்கு மாநாட்டிற்கான அழைப்பிதழை வெற்றிலை பாக்கு வைத்துக் கொடுத்து அழைப்பு விடுத்தனர். முன்னதாக மாநாடு சிறப்புடன் நடைபெற பாண்டி கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தவெக மாநாட்டிற்கு அழைத்த நிர்வாகிகள்
“செந்தில் பாலாஜி மீதுள்ள பயத்தினால்தான் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளனர்” – கடம்பூர் ராஜூ

மதுரையில் ஒரு தொகுதி சார்பில் 30 ஆயிரம் பேர் அழைத்துச் செல்லப்பட உள்ளதாகவும், தமிழிசை போன்றோரின் விமர்சனங்களுக்கு தாங்கள் பதிலளிக்க மாட்டோம் எனவும், மாநாடு சிறப்பாக நடைபெறும் எனவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com