ரஜினியிடம் ‘யார் நீங்க’ எனக் கேட்ட இளைஞர் பைக் திருட்டு வழக்கில் கைது..!

ரஜினியிடம் ‘யார் நீங்க’ எனக் கேட்ட இளைஞர் பைக் திருட்டு வழக்கில் கைது..!

ரஜினியிடம் ‘யார் நீங்க’ எனக் கேட்ட இளைஞர் பைக் திருட்டு வழக்கில் கைது..!
Published on

ரஜினியிடம் ‘யார் நீங்க’ எனக் கேட்டவர் பைக் திருட்டு வழக்கில் கைதாகியுள்ளார்.

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சாம்குமார் (24). இவரது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக் காணாமல் போனது. இதுகுறித்து வடபாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் துாத்துக்குடி பண்டாரம் பட்டியை சேர்ந்த சந்தோஷ் (23), மற்றும் கால்டுவெல் காலனியை சேர்ந்த மணி (23), ஆசிரியர் காலனியை சேர்ந்த சரவணன் (22), ஆகியோர் பைக்கை திருடியது தெரியவந்தது.

அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து பைக்கை பறிமுதல் செய்தனர். கைதான சந்தோஷ், துாத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டு தாக்குதலில் காயமுற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர். காயமுற்றவர்களிடம் ஆறுதல் கூற நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.

அந்த நேரத்தில் ரஜினியை பார்த்து ‘ஆமா.. நீங்க யார்’ என சந்தோஷ் கேட்க அந்த செய்தி அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் அந்த இளைஞர், பைக் திருட்டு வழக்கில் தற்போது கைதாகியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com