”16 ஆண்டுகள் ஸ்டெர்லைட் ஆலை இயங்கியது அதிர்ச்சியே” உயர்நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்

”16 ஆண்டுகள் ஸ்டெர்லைட் ஆலை இயங்கியது அதிர்ச்சியே” உயர்நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்

”16 ஆண்டுகள் ஸ்டெர்லைட் ஆலை இயங்கியது அதிர்ச்சியே” உயர்நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்

இயற்கை மாசுபாட்டுடன் கிடைக்கும் பொருளாதாரத்தைவிட சுற்றுச்சூழலே முக்கியம் என ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பில் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டது. அத்துடன் ஸ்டெர்லைட் ஆலையின் மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை நிராகரித்து தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் :

  • ஆலையின் விரிவாக்க பகுதியை உரிய அனுமதிகளை பெறாமல் இயக்கியதிலிருந்து ஸ்டெர்லைட் நிறுவனத்தின் செயல்பாட்டை புரிந்து கொள்ள முடிகிறது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையை பார்க்கும்போது வேதாந்தாவின் வாதங்களை நிராகரிக்கவே வேண்டியுள்ளது.
  • 16 ஆண்டு 92 நாட்கள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதியில்லாமலேயே, நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாய உத்தரவுகளின் அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலை இயங்கியது அதிர்ச்சிகரமான உண்மை. நச்சுத்தன்மையுள்ள ஆர்செனிக் அமிலம் அதிக அளவில் வெளியேற்றப்பட்டுள்ளது. ரசாயன கழிவுகளை ஆலை நிர்வாகம் முறையாக அப்புறப்படுத்தவில்லை.
  • ஆலையின் முந்தைய நடவடிக்கைகளின் அடிப்படையில், ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற அரசின் முடிவு நியாயமானது. இந்த முடியில் எந்த தவறும் இல்லை. கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் தூத்துக்குடி பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியுள்ளது.
  • ஆலையை மூட 2018ல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவு, தமிழக டிஜிபி, கொதிகலன்கள் இயக்குனர், தொழிற்சாலை பாதுகாப்பு இயக்குனர், ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ஆகிய அனைத்தும் செல்லும். வேதாந்தா மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
  • ஆலையை பராமரிக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஸ்டெர்லைட்டின் கதை நம்பும்படியாக இல்லை. சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சல், தொண்டை பாதிப்பு உள்ளிட்ட உடல்நிலை கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு 1000 மடங்கு மூளை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் உடல்நலத்தை ஆலை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
  • ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டால் இந்தியாவின் தாமிர தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்ற ஆலை நிர்வாகத்தின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
    அதிக அளவில் இயற்கையை மாசுபடுத்தும் தொழிற்சாலையினால் கிடைக்கும் பொருளாதார நிலையை விட, சுற்றுச்சூழலை பாதுகாப்பதே முக்கியம். ஆண்டுக்கு 8 லட்சம் டன் கழிவு வெளியேற்றும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எந்தவித அடிப்படை உரிமையும் இல்லை.
  • ஏற்கனவே மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட இரண்டு மாநிலங்களில் மக்களின் எதிர்ப்பு காரணமாக ஆலையை அமைக்க வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
    அரசியல் காரணங்களுக்காக ஆலை மூடப்பட்டது என்றால், இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஆலை நிறுவப்பட்டதையும் அப்படி பார்க்க தோன்றுகிறது. உள்நோக்கம் மற்றும் அரசியல் காரணங்களுக்காக ஆலை மூடப்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com