தூத்துக்குடி: கட்டும்போதே பெயர்ந்து விழும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் #ViralVideo

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டட பணியில் சுவர்கள் பெயர்ந்து விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஒரு கட்டடம் சேதமடைந்திருந்த நிலையில் அதை சீரமைத்துத் தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து புதிதாக கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு 71 லட்சம் ரூபாய், பழைய கட்டடத்தை புதுப்பிக்க 25 லட்சம் ரூபாய் என மொத்தம் 96 லட்சம் ரூபாய் மதிப்பில் சி.எஸ்.ஆர் நிதி ஒதுக்கப்பட்டது. இதன்மூலம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

இந்த நிலையில் அஸ்திவாரம் முறையாக அமைக்கப்படாமல் ஜல்லி கற்கள் பெயர்ந்து விழும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கேட்டபோது தங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்து விட்டனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com