கொரோனாவால் இறந்த லேப் டெக்னீசியன் மாமியார் : தூத்துக்குடியில் சோகம்

கொரோனாவால் இறந்த லேப் டெக்னீசியன் மாமியார் : தூத்துக்குடியில் சோகம்
கொரோனாவால் இறந்த லேப் டெக்னீசியன் மாமியார் : தூத்துக்குடியில் சோகம்

தூத்துக்குடியில் தனியார் மருத்துவமனையில் பணபுரிந்த லேப் டெக்னீசியனின் மாமியார் கொரோனா வைரஸால் உயிரிழந்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போது வரையிலும் 911 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் மட்டும் 77 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் ஒரு பெண்மணி உயிரிழந்ததால், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போல்டன்புரம் பகுதியைச் சேர்ந்த டெல்சி என்பவர் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் லேப் டெக்னீசியன் ஆக பணியாற்றி வருகிறார். அவரைத்தொடர்ந்து அவரது கணவர் பாக்கியராஜ் மற்றும் மாமியார் அந்தோணியம்மாள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் இன்று மாலை சுமார் 5 மணி அளவில் அந்தோணியம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தூத்துக்குடியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com